பச்சைப் பட்டுடுத்தி கள்ளழகர் வைகையாற்றில் இறங்கினார்!

மதுரை: மதுரை அழகர்கோவில் சுந்தர்ராஜப் பெருமாள் கள்ளழகர் வேடமணிந்து வைகை ஆற்றில் இறங்குவதற்கு தங்கப் பல்லக்கில் நேற்று முன்தினம் புறப்பட்டார்.வரும் வழியில் திரண்டிருந்த ஏரளமான பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நேற்று இரவு தல்லாகுளம் ஸ்ரீ பிரசன்ன வெங்கடாசலபதி கோவிலில் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சூடிகொடுத்த மாலையை அணிந்து பக்தர்களுக்கு ஆசி வழங்கினார்.இன்று காலை பச்சை பட்டுடுத்தி தங்க குதிரையில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கினார். இதை அங்கு திரண்டிருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் பார்த்து பக்தி பரவசமடைந்தனர்.பச்சைப் பட்டுடுத்தி கள்ளழகர் வைகையாற்றில் இறங்கியதால் இந்த ஆண்டு விவசாயம் சிறப்பாக இருக்கும் என்று பக்தர்கள் கூறினர். பக்தர்களின் பாதுகாப்புக்காக 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here