அல்லாவின் மீது ஆணையாக…….! குற்றமற்றவரின் கண்ணீர் கடிதம்!!

கோரக்பூர்: உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூர் நகரில் பாபாராகவ் தாஸ் அரசு மருத்துவமனை உள்ளது.
2017 ஆகஸ்ட்7ம் தேதி அங்கு லிக்விட் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டது.இதனால் 63குழந்தைகள் மூளைவீக்க பாதிப்பால் இறந்தனர். குழந்தைகளுக்கு சிகிச்சை தொடர்ந்து அளிக்க ஆக்சிஜன் வாங்க போராடிய டாக்டர் கபீல்கான் கைதானார்.
8மாதங்களுக்கு பின்னர் அவர் ஜாமீனில் வெளிவந்துள்ளார். கோரக்பூர் மருத்துவமனையில் நடந்தது என்ன என்று விளக்க கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.நெஞ்சத்தை சுட்டு, கண்ணீர் வரவழைக்கும் கடிதமாக அது உள்ளது.
மருத்துவமனைக்கு கேஸ் சப்ளை செய்த புஷ்பாகேஸ் நிறுவனத்துக்கு ரூ.68லட்சம் பாக்கி வைத்துள்ளதால் கேஸ் சப்ளை நிறுத்தப்பட்டது. எனது சொந்தப்பணம் கொடுத்தும், எல்லைப்பாதுகாப்பு படையினர் உதவியோடும் தற்காலிக ஏற்பாடாக கேஸ் கிடைக்க ஏற்பாடு செய்தேன்.
ஆகஸ்ட்12 இரவு முழுவதும் பணிசெய்து குழந்தைகளை காப்பாற்ற போராடினோம்.
ஆகஸ்ட்13ல் முதல்வர் யோகி ஆதித்யநாத் வருகைதந்தார். நிலைமை தலைகீழாக போனது.

அப்படி என்றால், வாயு சிலிண்டர்கள் ஏற்பாடு செய்ததால் நீங்கள் ஒரு ஹீரோ ஆகிவிட்டீர்கள் என்று நினைக்கிறீர்கள் அப்படித்தானே…? நாம் பார்க்கலாம். என்று முதல்வர் கோபம் கொண்டார்.
இச்செய்தி ஊடகங்களில் வந்துவிட்டதுதான் அவரது கோபத்துக்கு காரணம்.
நான் அல்லாவின் மேல் ஆணையிட்டு சொல்கிறேன். நான் யாருக்கும் தகவல் தெரிவிக்கவில்லை. ஊடகவியலாளர்கள் ஏற்கனவே அன்றைய தினம் இரவில் அங்கிருந்தார்கள்.நான் சஸ்பெண்ட் செய்யப்பட்டேன். கைதாகி சிறையில் 8மாதங்கள் அடைக்கப்பட்டேன்.
சாதாரண கைதிகளுடன் தங்கவைக்கப்பட்டு பகலில் ஈக்களுடன், இரவில் கொசுக்களுடனும் போராடி கழித்தேன்.நான் நம்பிக்கையோடு இருக்கிறேன். இவ்வழக்கில் இருந்து விடுதலைபெற்று எனது குடும்பத்துடனும் குழந்தைகளுடனும் இருக்கும் காலம் வருமென்று நம்புகிறேன்.
உண்மை நிச்சயம் வெல்லும்..நீதி கிடைக்கும். இவ்வாறு கபீல்கான் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here