காதலியின் கழுத்தை அறுத்து நாடகமாடிய காதலன் கைது!

வேலூர்: வேலூர் மாவட்டம் காட்பாடி எம் ஜி ஆர் நகரில் வசிப்பவர் ஷபீர். வேலூர் தனியார் பல்கலையில் எம்.பி.ஏ முதலாம் ஆண்டு படித்து வருகிறார். காட்பாடி கல்புதூர் பகுதியை சேர்ந்தவர் சுபித்ரா தேவி தனியார் கல்லூரியில் பி.காம் படித்தவர். தனியார் நிறுவனத்தில் வேலையில் இருக்கிறார்.கடந்த நான்கு வருடங்களாக இருவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. ஷபீர் தன்னை கல்யாணம் செய்து கொள்ளும் படி சுபித்ரா தேவியிடம் கேட்டு வந்துள்ளார். தனது பெற்றோர் சம்மதித்தால் மட்டுமே திருமணம் என சுபித்ரா தேவி கூறி வந்துள்ளார். இது குறித்து சுபித்ராவின் பெற்றோர் இருமுறை காட்பாடி காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளனர்.நீண்ட நாட்களுக்கு பிறகு ஷபீர் சுபித்ராவிற்கு போன் செய்து பேச வேண்டும் என்று கூறியுள்ளார். இருவரும் பேசிக்கொண்டிருக்கும் போது ஷபீர் தன்னை கல்யாணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தியுள்ளார். மேலும் இஸ்லாமிய பெண்ணாக மாற வேண்டும் எனவும் கேட்டுள்ளார்.மறுப்பு தெரிவித்த சுபித்ராவை தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் கழுத்தை அறுத்துள்ளார். போலீசில் ஷபீர் தீடிரென சுபித்ரா கழுத்தில் ரத்த காயத்துடன் மயங்கி விழுந்ததாகவும் அவரை மீட்டு மருத்துவ மனையில்சேர்த்ததாகவும் கூறியுள்ளார். சந்தேகமடைந்த போலீசார் ஷபீரிடம் நடத்திய விசாரணையில் குற்றத்தை
ஒப்புக்கொண்டார். போலீசார் அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here