சிறுமி பலாத்காரம் சாதாரண விஷயம்! காஷ்மீர் துணைமுதல்வர் பேச்சால் சர்ச்சை!!

காஷ்மீர்: காஷ்மீரின் புதிய துணைமுதல்வராக பொறுப்பேற்றுள்ள கவிந்தர் குப்தா, சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டது ஒரு சிறிய சாதாரண விஷயம் என்று தெரிவித்தார்.

இது மிகப்பெரும் அதிர்வலையை நாடுமுழுவதும் ஏற்படுத்தியுள்ளது.
காஷ்மீர் கத்வா பகுதியில் 8வயது சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்.
இதனைத்தொடர்ந்து பாஜக அமைச்சர்கள் இருவர் ராஜினாமா செய்தனர்.
காஷ்மீரில் நடைபெற்றுவரும் பிடிபி தலைமையிலான கூட்டணி ஆட்சியில் அமைச்சரவை மாற்றம் நடந்தது.பாஜக தலைவர் ஜத்பால் ஷர்மா, ராஜிவ், சுனில்குமார்சர்மா, தேவேந்திரகுமார், சக்திராஜ் ஆகிய ஐந்துபேரும் அமைச்சர்களாக பதவியேற்றனர்.
துணைமுதல்வராக கவிந்தர்குப்தா பதவியேற்றார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டது சாதாரண சிறிய விஷயம், இதைப் பெரிது படுத்தாதீர்கள் என்று தெரிவித்தார்.
இது சமூக ஊடகங்களில் கண்டனத்துக்குள்ளானது.சிறுமி பலாத்கார சம்பவம் நீதிமன்றத்தில் உள்ளதால் பெரிதுபடுத்த வேண்டாம் என்று கூறினேன்.
தவறாக எதையும் தெரிவிக்கவில்லை என்று விளக்கம் அளித்துள்ளார் கவிந்தர் குப்தா.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here