இளைஞர்களிடம் சிக்கிய சிறுமி! பிகாரில் வெளியான அதிர்ச்சி விடியோ!!

பிகார்: சிறுமி ஒருவரை எட்டு இளைஞர்கள் பலவந்தப்படுத்தும் அதிர்ச்சி விடியோ இணையத்தில் வெளியாகி உள்ளது.
ஜெகனாபாத்தை சேர்ந்த சிறுமி ஒருவர் இளைஞர்களிடம் சிக்கிய விடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.சிறுமி ஒருவரை ஒரு வாலிபர் கையால் பிடித்துக்கொண்டிருக்க மற்ற சிலர் தாக்கி பலவந்தப்படுத்துகின்றனர்.
இதுகுறித்து சைபர்க்ரைம் பிராஞ்ச் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
அந்த விடியோ சமூக ஊடகப்பக்கத்தில் இருந்து உடனடியாக நீக்கப்பட்டது.அதில் இருந்த இளைஞர்கள் குறித்து விசாரிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
விடியோவில் ஒரு மோட்டார் சைக்கிள் காணப்படுகிறது.
அந்த வாகன எண்ணை அடையாளம் கண்டு விசாரணை வேகமெடுத்து வருகிறது.
குற்றவாளிகள் கண்டறியப்பட்டு போக்சோ சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here