கல்லூரி மாணவி திருமணம்! காதலன் வீட்டை பூட்டிய தந்தை!!

தலைவாசல்: தலைவாசல் பூமரத்துப்பட்டியை சேர்ந்தவர் டிரைவர் சத்தியமூர்த்தி. திருச்சி வாழையூரைச் சேர்ந்த கல்லூரி மாணவி சத்யபிரியா. சத்யபிரியா விடுமுறை நாட்களில் பூமரத்துப்பட்டியில் பாட்டி வீட்டிற்கு வருவார்.அப்போது அதே பகுதியை சேர்ந்த சத்தியமூர்த்திக்கும் அவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் காதலாக மலர்ந்தது. இருவரும் 4 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் சத்தியமூர்த்தியும், சத்யபிரியாவும் சில தினங்கள் முன் மாயமானார்கள்.
காதலனுடன் சென்ற சத்யபிரியா பதிவு திருமணம் செய்து கொண்டார். இது குறித்து பெற்றோருக்கு தெரிவித்தனர். சத்யபிரியாவின் தந்தை பொன்னுசாமி தனது உறவினர்களுடன் பூமரத்துப்பட்டிக்கு வந்தார். சத்தியமூர்த்தி வீட்டுக்கு சென்று அவர்களை தேடினார்.
இருவரும் அங்கு இல்லாததை கண்டு ஆத்திரம் அடைந்த பொன்னுசாமி சத்தியமூர்த்தி வீட்டை பூட்டு போட்டு பூட்டினார். இதை பார்த்த சத்தியமூர்த்தியின் உறவினர்கள் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். சம்பவம் அறிந்து வந்த தலைவாசல் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here