கோபாலபுரத்தில் கருணாநிதியை சந்தித்தார் சந்திரசேகர ராவ்! ஸ்டாலினுடன் மூன்றாவது அணி குறித்து ஆலோசனை!!

சென்னை: ராஷ்டிரிய சமீதி கட்சி தலைவரும் தெலுங்கான முதல்வருமான சந்திரசேகர ராவ் மத்தியில் பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக 3வது அணி அமைக்கும் முயற்சியில் தீவிரம் காட்டி வருகிறார்.இதற்காக திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும் மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜியுடன் ஆலோசனை நடத்தியுள்ளார். திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் 3வது அணி தொடர்பாக மம்தா பானர்ஜிக்கு வாழ்த்து தெரிவித்திருந்தார்.தெலுங்கான முதல்வர் சந்திரசேகர ராவ் இன்று சென்னை வந்தார். கோபாலபுரத்தில் உள்ள திமுக தலைவர் மு.கருணாநிதியை சந்தித்து நலம் விசாரித்தார். ஸ்டாலின் சந்திரசேகர ராவை வரவேற்று சால்வை அணிவித்தார்.
பின்னர் இருவரும் 3வது அணி குறித்து ஆலோசனை நடத்தினார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here