சிகிச்சைக்கு வந்த பெண்களை வீடியோ எடுத்த மருத்துவர் கைது!

திருவள்ளூர்: ரூதர்புரத்தில் இருக்கும் தாய் வீட்டிற்கு வந்த பெண் மார்பில் வலி ஏற்பட்டதையடுத்து நாட்டுசுப்பராயன் தெருவிலுள்ள மருத்துவரிடம் சிகிச்சைக்கு நேற்று சென்றுள்ளார்.அவரை மருத்துவர் சிவகுருநாதன் பரிசோதித்துள்ளார். மார்பு பகுதியில் சிகிச்கை அளிக்க தனியறைக்கு அழைத்து சென்று சிகிச்சையளிக்க மேலாடையை அகற்ற சொல்லியுள்ளார்.சிகிச்சைக்கு வந்த பெண்ணுக்கு தெரியாமால் செல்போனில் அதை பதிவு செய்துள்ளார். மருத்துவரின் செய்கையில் சந்தேகமடைந்த பெண் தனியறையில் இருந்து வெளியே வந்து அங்குள்ளவரிடம் இது குறித்து தெரிவித்துள்ளார்.அங்கிருந்தவர்கள் மருத்துவரின் செல்போனை வாங்கி பார்த்துள்ளனர். மருத்துவர் அதற்குள்ளாக விடியோ பதிவுகளை நீக்கி விட்டார். இது குறித்து அந்த பெண் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார்.விசாரணையில் சிவகுருநாதனிடம் இருந்த மற்றொரு செல்போனில் வேறு பெண்களை தவறான முறையில் எடுத்த விடியோ பதிவு இருந்துள்ளது. இதையடுத்து போலீசார் மருத்துவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here