புழல் சிறையில் கைதி தூக்கிட்டு தற்கொலை!

சென்னை: சென்னை புழல் மத்திய சிறையில் திருவள்ளூரை சேர்ந்த சக்திவேல் வழிப்பறி செய்ததற்காக விசாரணை கைதியாக அடைக்கப்பட்டிருந்தார்.நேற்று மாலை கழிப்பறைக்கு சென்றவர் ஜன்னலில் தூக்கிகட்ட நிலையில் கிடந்துள்ளார். தன்னுடைய லுங்கியை கிழித்து தூக்கிட்டு கொண்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். நீதிமன்ற காவலில் சிறையில் உள்ள கைதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதால் நீதி விசாரணைக்கு உத்தரவிட உள்ளது.இரண்டு மாதங்களுக்கு ஒரு கைதி தற்கொலை செய்து கொள்வதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here