நகைக்காக கணவன் கண்முன்னே மனைவியை சுட்டுக்கொன்ற கொள்ளை கும்பல்!

உத்திரப்பிரதேசம்: உத்தரப்பிரதேச முஸாபர் நகரை சேர்ந்தவர் சாஜேப். இவருக்கும் காஸியாபாத் நாகர் பகுதியை சேர்ந்த பஹ்ரானாவுக்கும் திருமணம் நடந்தது. திருமணம் முடிந்து புதுமண தம்பதிகள் காரில் முஸாபர் திரும்பிக் கொண்டிருந்தனர்.வழியில் இரவு உணவு விடுதியில் சாப்பிட்டு விட்டு பயணத்தை தொடர்ந்துள்ளனர். தேசிய நெடுஞ்சாலையில் கார் சென்று கொண்டிருந்தபோது அவர்கள் காரை பின் தொடந்து வந்த மற்றொரு கார் வழிமறித்து நிறுத்தியது.காரில் இருந்து துப்பாக்கியுடன் இறங்கிய நான்கு பேர் கொண்ட கொள்ளை கும்பல் புது மணபெண்ணிடம் இருந்த நகைகளை கேட்டுள்ளனர். பஹ்ரான நகைகளை தர மறுத்துள்ளார். இதில் ஆத்திரம் அடைந்த கொள்ளை கும்பல் பஹ்ரானாவை துப்பாக்கியால் சுட்டு கொன்று நகைகளை எடுத்துகொண்டு தப்பியது.இதுகுறித்து கணவர் சாஜேப் போலீசில் தெரிவித்துவிட்டு மனைவியை சிசிக்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தார். மருத்துவர்கள் பஹ்ரானா ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். சம்பவம் நடந்த இடத்திற்கு சென்ற போலீசார் அங்கு பதிவான சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி கொள்ளை கும்பலை தேடிவருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here