சிறுவர்களை வாகனம் ஓட்ட அனுமதித்த 26 பெற்றோருக்கு சிறை!

ஐதராபாத்: கல்லுரி மாணவிகள் நான்கு பேர் குடிபோதையில் காரை ஓட்டி குஷைகுடா பகுதியில் நடைபாதையில் படுத்து தூங்கி கொண்டு இருந்த அசோக் அவரது மகன் மகேஷும் கொல்லப்பட்டனர்.மதுவிலக்கு அமலாக்கப் பிரிவினர் சார்பில் மதுக்கூடத்துக்கு சீல் வைத்து 21 வயது கீழ் உள்ளவர்களுக்கு மது வழங்கக் கூடாது என உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டது.சமீபகாலமாக சிறுவர்கள் இருசக்கர வாகனங்கள், கார்களை இயக்கி விபத்தை ஏற்படுத்துவது அதிகரித்தது. சிறுவர்கள் வாகனங்களை இயக்குவது குறித்து சிறப்பு கவனம் செலுத்தி அவர்களை பிடிக்கும் முயற்சியில் போக்குவரத்து போலீசார் ஈடுபட்டனர்.ஐதராபாத் நகரில் வாகனங்களை ஓட்டி பிடிபட்ட சிறுவர்களின் பெற்றோர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. கடந்த மாதத்தில் 20 பெற்றோர்கள்மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. ஏப்ரல் மாதத்தில் 6 பெற்றோர்கள் மீது வழக்கு பதிந்து நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர்.சிறுவர்களை வாகனம் இயக்க பெற்றோர்கள் அனுமதிக்ககூடாது என விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டுவருகிறது என ஐதராபாத் மாநகர இணை கமிஷனர் அனில் குமார் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியின் போது தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here