புஜியான்: குரங்கிடமே குரங்குச்சேட்டை செய்தால் என்னவாகும் என்பதை சீனாவில் நடந்த இச்சம்பவம் எடுத்துக்காட்டுவதாக உள்ளது.
புஜியான் மாகாணத்தில் உள்ள சிடியான் கோவில் மிகவும் பிரபலமானது.கோவில் வளாகத்தில் குரங்குகள் அதிகளவில் உள்ளன.
கோவில் தெப்பக்குளத்தின் கரையில் உட்கார்ந்திருந்த குரங்கு ஒன்றை அங்குவந்த வாலிபர் பின்னாலிருந்து தள்ளிவிட்டார்.குளத்துக்குள் விழாமல் தப்பித்துவந்த குரங்கு அந்த வாலிபரை அடையாளம் கண்டு விரட்டியது. அவர் கோவிலுக்குள் ஓடிச்சென்றார். இதற்கிடையே, குளத்தில் விழுந்த குரங்கின் ஜோடிக்குரங்கு எங்கிருந்தோ வந்தது.
வாலிபரை விடாமல் அது ஓடஓட விரட்டிச்சென்றது.இக்காட்சியை அங்கிருந்த கடைக்காரர் ஒருவர் படமெடுத்து இணையத்தில் உலாவவிட்டுள்ளார்.