அமைதிப்பூங்காவாகிறது கொரிய தீபகற்பம்!

சியோல்:கொரிய தீபகற்ப பகுதியில் இனி போர் கிடையாது என்று வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன், தென்கொரிய தலைவர் மூன் ஜேவும் இணைந்து அறிவித்துள்ளனர்.
1953ல் கொரியப்போர் முடிந்த பின் இருநாடுகளும் கருத்து வேறுபாடுகளை கொண்டிருந்தன.
ஒன்றை ஒன்று அழிப்பதற்காக பனிப்போரில் ஈடுபட்டுவந்தன.இருநாடுகளுக்கும் இடையே அணு ஆயுத தயாரிப்பு, ஆயுதக்குவிப்பு நடந்துவந்தது.
இந்நிலையில், தென்கொரியாவுக்காக அமெரிக்கா வடகொரியாவை தாக்கநேரிடும் அபாயமும் ஏற்பட்டது.
அணுஆயுதங்களை முதலில் பயன்படுத்த மாட்டேன் என தெரிவித்த வடகொரியா பின்னர் சீனாவின் சமாதானத்தை அணு ஆயுதம் தயாரிப்பதில்லை என்ற சமாதான முடிவுக்கும் வந்தது.இன்று இருநாட்டு தலைவர்களும் சந்தித்தனர். வரலாற்றுச்சிறப்புமிக்க இச்சந்திப்பில் இருவரும் இணைந்து கூட்டறிக்கை வெளியிட்டனர்.
கொரிய தீபகற்பத்தில் இனி அணுஆயுத சோதனைகள் மேற்கொள்ளப்படாது
இரு நாட்டுத் தலைவர்களும் ஒன்றிணைந்து செயல்பட முடிவு செய்துள்ளனர்.

தற்போது இருநாட்டின் எல்லையில் ராணுவம் இல்லாத பொதுப்பகுதி அமைதி மண்டலமாக மாற்றப்படும்.
துயரங்களை கடந்து செல்லாமல் ஒருபோதும் வெற்றியை சுவைக்க முடியாது
இந்த அதிரடி முடிவால் பின்னடைவு, துன்பம் மற்றும் ஏமாற்றம் ஏற்படலாம் எனவும், அதையும் கடந்து சாதிப்போம்
இவ்வாறு கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here