அமெரிக்காவில் ரஜினிகாந்த்!

நியூயார்க்: அமெரிக்கா சென்றுள்ள ரஜினிகாந்த் மெட்ரோ ரயிலில் பயணம் செய்வது போன்று புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.அரசியல் கட்சி துவக்க ரஜினி தயாராகி வருகிறார். இதற்காக ரஜினி மக்கள் மன்றம் அமைப்பை தொடங்கி உள்ளார்.  தமிழகம் முழுவதும் மன்றத்துக்கான உறுப்பினர் சேர்க்கை, நிர்வாகிகள் நியமனம் பணிகள் முடிவடைந்துள்ளன.                       அமெரிக்கா, கனடா, ஐரோப்பா, இலங்கை நாடுகளிலும் ரஜினி மக்கள் மன்றம் தொடங்கப்பட்டு நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அரசியல் பணிகளில் வேகமெடுக்க திட்டமிட்டுள்ள ரஜினி அமெரிக்கா சென்று உடல்பரிசோதனை செய்துகொண்டு திரும்ப உள்ளார். இதனால் இரு தினங்களுக்கு முன் அவர் அமெரிக்கா சென்றார். அங்கு 2வாரம் தங்கியிருக்க திட்டமிட்டுள்ளார்.  அமெரிக்காவில் மெட்ரோ ரயில் நிலையத்திலும், மெட்ரோ ரயிலிலும் அவர் ஸ்டைலாக நிற்கும் படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளன.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here