பெங்களூரு: கர்நாடக மாநில சட்டசபை தேர்தல் மே 12ஆம் தேதி நடைபெறுகிறது. காங்கிரஸ், பா.ஜ.க. உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கர்நாடக மாநிலத்தில் இரண்டு நாட்கள் தேர்தல் பிரச்சாரம் செய்ய உள்ளார். இதையொட்டி டெல்லியில் இருந்து ஹூப்ளிக்கு தேர்தல் பிரச்சாரம் செய்ய ராகுல் காந்தி விமானத்தின் மூலம் பயணம் செய்தார்.
திடீரென விமானத்தில் ஏற்பட்ட இயந்திர கோளாறு காரணமாக ஹூப்ளி விமான நிலையத்தில் விமானம் அவசரமாக தரையிறங்கியது. ராகுல் காந்தி உள்பட அனைவரும் பத்திரமாக வெளியேறினர்.
வானிலை சரியாக இருந்தது என்றும் விமானம் வழக்கத்திற்கு மாறாக அச்சுறுத்தும் வகையில் இயங்கியது என விமானக்குழுவினர் தெரிவித்துள்ளனர். பிரதமர் அலுவலகத்தில் இருந்து ராகுல் காந்தியின் நலம் விசாரிக்கப்பட்டது.
ராகுல் காந்தி சென்ற விமானத்தில் ஏற்பட்ட இயந்திர கோளாறு குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என காங்கிரசார் கோரிக்கை விடுத்துள்ளனர்.