திருமண வரவேற்பில் புதுமை! உடல் உறுப்புதானம் செய்ய விருந்தினர் ஒப்புதல்!!

கோவை: திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் உடலுறுப்பு தானம் வழங்க சம்மதம் தெரிவித்துள்ளனர்.கோவை தொழிலதிபர் இமயவன் – அஞ்சுகம் தம்பதியினர் தங்கள் திருமண வரவேற்பு நிகழ்ச்சியை வித்தியாசமாக நடத்த எண்ணினர்.
வரவேற்பு நிகழ்ச்சிக்கு வருவோரிடம் மோகன் அறக்கட்டளை சார்பில் உடலுறுப்புதானம் விளக்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தார் இமயவன். திருமண அழைப்பிதழ் கொடுக்கும்போதே இதனையும் விவரித்துள்ளார் அவர்.மணமக்களை வாழ்த்த வந்த நூற்றுக்கணக்கானோர் இவ்விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பங்கேற்றனர். அவர்களில் பலர் உடலுறுப்பு தானம் செய்ய சம்மதித்து அதற்கான ஒப்பந்த பத்திரத்தில் கையெழுத்திட்டனர்.

இந்தியாவில் உடலுறுப்பு தானம் வழங்குவது சமீபத்தில் மிகவும் பிரபலமாகி வருகிறது.
இது போன்ற நிகழ்வுகள் நடத்தும்போது அறியாமை உடைந்து விழிப்புணர்வு ஏற்படும் என்பதற்காகவே தங்கள் திருமண வரவேற்பில் இதற்கான ஏற்பாட செய்ததாக இமயவன் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here