தாயின் தவறான நட்பு! மகள் நான்கு மாத கர்ப்பம்!

சென்னை: சென்னையை அடுத்த திருநின்றவூர் பகுதியை சேர்ந்தவர் நளினி இவருக்கு எட்டாம் வகுப்பு படிக்கும் மகள் உள்ளார். நளினிக்கும் அதே பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் பரமசிவத்திற்கும் இடையே நட்பு இருந்து வந்துள்ளது.நளினியின் நட்பின் மூலம் அவரது எட்டாம் வகுப்பு படிக்கும் 12 வயது மகளுடன் பரமசிவம் பழகியுள்ளார். இந்நிலையில் மாணவிக்கு திடீரென வாந்தி, மயக்கம் ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் மாணவி நான்கு மாதம் கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
அதிர்ச்சியடைந்த நளினி மகளின் கர்ப்பத்தை கலைக்க சென்னை வண்ணாரப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு சென்றுள்ளனர். மருத்துவர்களிடம் மாணவியின் வயது 18 என தெரிவித்து கர்ப்பத்தை கலைக்க கூறியுள்ளார். அதை நம்ப மறுத்த மருத்துவர்கள் போலீசில் தெரிவித்தனர்.
விசாரணையில் உண்மையை கூறிய நளினி யாருக்கும் தெரியாமல் மகளின் கருவை கலைக்க மருத்துவமனைக்கு வந்ததாக கூறியுள்ளார். இதையடுத்து மாணவியிடம் போலீசார் விசாரித்தபோது பரமசிவத்தின் பெயரை கூறியுள்ளார்.  பரமசிவத்தை காவல்துறையினர் கைது செய்து போக்சோ சட்டத்தின் கீழ் சிறையில்அடைத்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here