மதரசாவுக்குள் 11 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை!

புதுடெல்லி: டெல்லி காஸிபூரில் வசிக்கும் 11 வயது சிறுமி பொருட்கள் வாங்க கடைக்கு சென்றுள்ளார். அங்கு வந்த 17 வயது சிறுவன் சிறுமியை மதரசாவுக்கு அழைத்து சென்று சிறுமியை பாலியல் வன்முறை செய்துள்ளான்.சிறுமியை காணவில்லை என்று பெற்றோர் போலீசில் புகார் தெரிவித்தனர். போலீசார்
கடைவீதியில் இருந்த கண்காணிப்பு கேமாராவை ஆராய்ந்தனர். சிறுமியை ஒருவன் அழைத்து செல்வது பதிவாகியிருந்தது.சிறுமியிடமிருந்த செல்போன் சிக்னலை வைத்து போலீசார் தேடினர். காஸியாபாத் மதராசவில் செல்போன் இருப்பது தெரிந்தது. அங்கு மயங்கி கிடந்து சிறுமியை போலீசார் மீட்டனர்.சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்படடிருப்பது மருத்துவ பரிசோதனையில் உறுதியானது. 17 வயது சிறுவனை போலீசார் கைது செய்தனர். சிறுவனை சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here