டெல்லி பாய்ச்சல்! கொல்கத்தா பதுங்கல்!!

டெல்லி: ஐபிஎல் கிரிக்கெட்டின் 26வது லீக் போட்டி பெரோசாகோல்டா மைதானத்தில் இன்று நடைபெற்றது.
டெல்லி டேர்டெவில்ஸ், கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிகள் மோதின.
டாஸ்வென்ற கொல்கத்தா அணி கேப்டன் தினேஷ்கார்த்திக், டெல்லியை பேட் செய்ய அழைத்தார்.தொடக்க ஆட்டக்காரர்கள் ப்ருத்விஷா, முன்ரோ ஜோடி 5ஓவர்களில் 51ரன் குவித்தனர்.
முன்ரோ வெளியேற கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் களமிறங்கினார்.
இவருடன் ஜோடி சேர்ந்தவர்கள் அனைவரும் களத்துக்கு திரும்ப 4விக்கெட் இழப்புக்கு 219ரன் குவித்தது டெல்லி அணி.ஸ்ரேயாஸ் அய்யர் 40 பந்துகளில் 93ரன் குவித்திருந்தார்.
தொடர்ந்து விளையாடிய கொல்கத்தா அணியில் சுனில் நரேன், க்றிஸ்லின் துவக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கினர். 2வது ஓவரில் கிறிஸ்லின் அவுட்டானார்.
முதல் ஐந்து ஓவர்களில் 3விக்கெட் இழந்து 46ரன் குவித்திருந்தது கொல்கத்தா அணி.

பத்தாவது ஓவரில் 5விக்கெட் இழந்து 83ரன் எடுத்தது. தொடர்ந்து விக்கெட்டுகள் சரிய 16ஓவர்களில் 7விக்கெட் இழப்புக்கு 141 ரன் மட்டுமே எடுத்து திணறியது.
20ஓவர் முடிவில் 9விக்கெட்டுகளை இழந்து 161ரன் மட்டுமே எடுக்க முடிந்தது. 55ரன் வித்தியாசத்தில் டெல்லி அணி வென்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here