மீடியாக்களுக்கு ஆளுநர் எச்சரிக்கை!

சென்னை: மீடியா நிறுவனங்கள் பரபரப்பு என்ற பெயரில் செய்திவெளியிடுகின்றன. அது அவர்களுக்கு எதிராகவே திரும்பும் என்று எச்சரித்துள்ளார் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்.தென்னிந்திய பத்திரிகையாளர் உச்சிமாநாட்டில் பங்கேற்று அவர் பேசியதாவது:
விற்பனையை அதிகரிக்கவும், பார்வையாளர்களை அதிகரிக்கவும் சில பத்திரிகையாளர்கள் பரபரப்பு செய்தி எழுதவேண்டிய நிர்பந்தத்துக்கு ஆளாகலாம். ஆனால், உண்மைக்கு எதிராக எழுதினால் சில நேரம் கழித்து பூமராங்காக அவர்களையே தாக்க திரும்பும்.
உண்மை எப்போதும் ஜொலிக்கும் சூரியனை போன்றது. அதனை மக்களிடம் இருந்து மறைத்துவைக்க முடியாது.அசாம் ஆளுநராக பதவியேற்குமுன் நானும் 40ஆண்டுகள் மீடியாத்துறையில் பணியாற்றியுள்ளேன்.
தற்போது மீடியா துறை சந்திக்கும் சவால்கள் அதிகம். கல்வி வளர்ச்சியால் பத்திரிகை, டிவி ஆகியவை வளர்ச்சியடைந்து வருகின்றன.
செய்திகள் ருவாக்கப்பட கூடாது. சரியான கோணத்தில் இருந்து சரியானவற்றை செய்தியாக்க வேண்டும்.கல்வி,வேலைவாய்ப்பு குறித்த நிகழ்ச்சிகள், நாடகங்கள் ஆகியவை ஒளிபரப்பப்பட்டு மக்களுக்கு உதவ வேண்டும்.
இந்திய ஜனநாயகத்தின் முக்கியத்தூணாக மீடியா விளங்குகிறது. மக்களிடம் அரசியல் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் மீடியாக்கள் உதவ வேண்டும். இவ்வாறு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பேசினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here