கல்லூரி மாணவர்களுக்கு இலவச ஸ்மார்ட் போன்! காங்கிரஸ் தேர்தல் அறிக்கை!

மங்களூர்: காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ள கர்நாடக தேர்தல் அறிக்கையில் கல்லூரி மாணவர்களுக்கு இலவச ஸ்மார்ட் போன் வழங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கர்நாடக மாநில சட்டசபைத் தேர்தல் மே 12ம் தேதி நடைபெறுகிறது.இதற்காக காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி கர்நாடகாவில் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றார். இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் தலைவர் ராகுல் காந்தி இன்று வெளியிட்டுள்ளார்.
அதில் கல்லூரி செல்லும் 18 முதல் 23 வயது வரையிலான அனைத்து மாணவர்களுக்கும் இலவச ஸ்மார்ட்போன் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சி கர்நாடகத்தில் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் பெங்களூருக்கு தடை இல்லாமல் குடிநீர் விநியோகிக்கப்படும். விவசாயிகளின் வருவாயை இரட்டிப்பாக்குவோம்.
காவிரி ஐந்தாம் கட்ட திட்டத்தை நிறைவேற்றுவோம். காவிரியின் 75 டி.எம்.சி தண்ணீரைப் பயன்படுத்தக்கூடிய வகையில் திட்டங்கள் செயல்படுத்தப்படும். இத்திட்டத்தை விரைவாகச் செயல்படுத்தும் வகையில், அதை மேற்கொள்ளும் நிறுவனத்துக்கு, முதல்கட்ட மானியமாக ஒரு கோடி ரூபாய் வழங்கப்படும்.
தொகையில் 25 லட்சம் ரூபாய் மானியமாகவும், எஞ்சிய 75 லட்சம் ரூபாய் 6 சதவிகித வட்டியில் அளிக்கப்படும் என்பது போன்ற எண்ணற்ற அறிவிப்புகள் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here