ஏடிஏம் வாகனத்தில் பணம் கொள்ளை! இரண்டு பேர் சுட்டுக்கொலை!!

புதுடெல்லி: புதுடெல்லி மேற்கு பகுதியில் நரேலா நகர் பகுதியில் நேற்று ஏடிஎம்மில் பணம் நிரப்ப வேன் சென்றது. ஹெல்மெட் அணிந்த இரண்டு பேர் இருசக்கர வாகனத்தில் வந்துள்ளனர்.அவர்கள் பணம் இருந்த வேனை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். வேனில் இருந்த பாதுகாவலர் மற்றும் கேசியர் இதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
கொள்ளையர்கள் இருவரும் ஏடிஏம்மில் பணம் நிரப்பவதற்கு கொண்டு சென்ற ரூ.11 லட்சத்தை திருடி சென்றனர்.
தகவலறிந்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அங்கிருந்தவர்களிடம் போலீசார் விசாரித்தனர்.ஹெல்மெட் போட்டிருந்ததால் அடையாளம் தெரியவில்லை என்று கூறியுள்ளனர். போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here