லாரி மோதியதில் தப்பாட்ட கலைஞர்கள் 5பேர் பலி!

ஹைதராபாத்: ஆந்திரமாநிலத்தில் நடந்த சாலை விபத்தில் தப்பாட்ட கலைஞர்கள் 5பேர் பலியாகினர் 3பேர் கவலைக்கிடமாக சிகிச்சை பெற்று வருகின்றனர்.பிலேரு கிராமத்தை சேர்ந்த தப்பாட்டக் கலைஞர்கள் குழு நெலகங்கம்மா கோவில் திருவிழாவில் கலை நிகழ்ச்சிகள் நடத்தி விட்டு திரும்பிக்கொண்டிருந்தனர்.    சித்தூர் அருகே இவர்கள் வந்த வாகனம் மீது சிமெண்ட் லாரி மோதியது.
பிரேக் பிடிக்காததால் தறிகெட்டு ஓடிவந்த சிமெண்ட் லாரி மோதியதில்  தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்தில் இருவர் இறந்தனர்.  இருவர் சிகிச்சைக்கு செல்லும் வழியில் இறந்தார்.  ஒருவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். கவலைக்கிடமான நிலையில் மேலும் இருவர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.                                                          இவ்விபத்தை தொடர்ந்து லாரி டிரைவர் மாயமாகி விட்டார். அவரை போலீசார் தேடிவருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here