ஸ்டெர்லைட் ஆலை மீது பெட்ரோல் குண்டுவீச்சு!

தூத்துக்குடி: ஸ்டெர்லைட் ஆலை மீது பெட்ரோல் குண்டுவீசி தாக்குதல் நடைபெற்றது.
ஸ்டெர்லைட் நிறுவனம் விரிவாக்க பணிகளை முன்னெடுத்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.விரிவாக்கப்பணிகளுக்கு தமிழக அரசு ஒப்புதல் அளிக்கவில்லை.
இருப்பினும், ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டங்கள் தொடர்ந்து வருகின்றன.
இந்நிலையில், வியாழக்கிழமை அதிகாலை ஸ்டெர்லைட் ஆலை வளாகம் முன் டூவீலரில் வந்த இருவர் பெட்ரோல்குண்டு வீசியுள்ளனர்.

அங்கிருந்த பாதுகாவலர்கள் தீயை அணைத்தனர். குண்டுவீச்சினால் சேதம் எதுவும் ஏற்படவில்லை என தெரியவந்துள்ளது. பெட்ரோல் குண்டுவீசிய மர்ம நபர்களை போலீசார் தேடிவருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here