ஒரு கண்ணில் வெண்ணெய்! மறு கண்ணில் சுண்ணாம்பு!!

ஹைதராபாத்:ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் குஜராத் மாநிலத்துக்கு கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டதற்காக பிரதமரை கடுமையாக தெலுங்கு தேசம் விமர்சித்துள்ளது.
ஆந்திரமாநிலம் 2ஆக பிரிக்கப்பட்டது. தெலங்கானா, ஆந்திரா என 2மாநிலங்கள் உருவாக்கப்பட்டன.புதிய ஆந்திரமாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கவும், நிதியுதவி செய்யவும் பிரதமர் உறுதியளித்தார்.
ஆனால், பட்ஜெட்டில் அதுதொடர்பாக அறிவிப்புகள் வெளியாகவில்லை. இதனால் பாஜக, தெலுங்கு தேசம் கூட்டணி முடிவுக்கு வந்தது.

ஆந்திர அரசு புதியதலைநகரை அமராவதியில் உருவாக்க திட்டமிட்டுள்ளது. அதனை ஸ்மார்ட் சிட்டியாக அமைக்க உள்ளது.
மத்திய அரசு ஸ்மார்ட் சிட்டி திட்டத்திலும் ஆந்திராவை புறக்கணித்துள்ளது.குஜராத் மாநிலத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்துக்காக ரூ. 44ஆயிரம் கோடியும், அமராவதிக்காக ரூ.2500 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது. இது ஆந்திர அரசை ஆத்திரமூட்டியுள்ளது.
ஒரு கண்ணுக்கு வெண்ணையும், மறு கண்ணுக்கு சுண்ணாம்புமாக மத்திய அரசின் நடவடிக்கை அமைந்துள்ளது என தெலுங்கு தேச நிர்வாகி கும்பம்பதி ராம் மோகன்ராவ் விமர்சித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here