சூப்பர் ஸ்டாருடன் இணையும் மக்கள் செல்வன்!

சென்னை: கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் புதிய படத்தில் ரஜினியுடன் இணைந்து விஜய் சேதுபதி நடிப்பதாக சன் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்த 2.0, பா.ரஞ்சித் இயக்கத்தில் நடித்த காலா திரைப்படங்கள் திரைக்கு வர காத்திருக்கின்றன.
இந்நிலையில் பீட்சா, ஜிகர்தண்டா, மெர்க்குரி படங்களை இயக்கிய கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்கிறார். ரஜினிக்கு ஜோடியாக த்ரிஷா, நயன்தாரா, தீபிகா படுகோன், அனுஷ்கா உள்ளிட்ட நான்கு பேரும் பரீசிலனையில் உள்ளனர்.
இப்படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். இக்கூட்டணியில் விஜய் சேதுபதி வில்லனாக நடிப்பதாக தகவல் வெளியாகியது. இதற்கு விஜய் சேதுபதி தரப்பு மறுப்பு தெரிவித்ததோடு இது தொடர்பாக யாரும் தொடர்பு கொள்ளவில்லை என கூறிவந்தனர்.
இந்நிலையில் ரஜினி படத்தில் விஜய் சேதுபதி நடிக்க இருப்பதாக படத்தைத் தயாரிக்கும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. விஜய் சேதுபதி ரஜினியுடன் நடிக்கும் முதல் படம் என்பதால் படத்திற்கு கூடுதல் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here