டெல்லி: 12000 பாலியல் வன்முறை வழக்குகள் தேங்கிக்கிடக்கின்றன என தடயவியல் துறை செய்திதொடர்பாளர் பத்திரிக்கையாளர்களிடம் கூறியுள்ளார்.பாலியல் சித்ரவதைகள், பாலியல் வல்லுறவு, பாலியல் கொலைகள் போன்ற குற்றங்கள் நிரூபிக்க முடியாமல் நாடு முழுவதும் தேங்கி கிடக்கின்றன. உயரிய தொழில்நுட்பங்கள் கொண்ட மரபணு பரிசோதனைகூடங்கள் போதிய அளவில் இல்லாததால் 2017ம் ஆண்டு வரை 12072 வழக்குகள் தேங்கியுள்ளன.
நாடு முழுவதும் உள்ள 6 தேசிய பரிசோதனை மையங்களில் சண்டிகர், ஹைதராபாத், கொல்கத்தா ஆகிய இடங்களில் மட்டுமே நவீன வசதிகள் உள்ளன.
அவ்வாறு சில இடங்களில் பரிசோதனை கூடங்கள் இருந்தாலும் தொழில்நுட்ப ஊழியர்கள் இல்லை என அவர் கூறியுள்ளார்.