அரசு பேருந்தில் பெண்ணுக்கு பிரசவம் பார்த்த மருத்துவர்கள்!!

குஜராத்: குஜராத் மாநிலம் வதோராவின் வத்ரா கிராமத்தில் இருந்து கர்ப்பிணிப்பெண் பிரசவத்திற்காகபேருந்தில் பயணம் செய்தார். பேருந்து கோத்ரா அருகே செல்லும் போது கர்ப்பிணி பெண்ணிற்குபிரசவ வலி ஏற்ப்ட்டுள்ளது.இதையடுத்து பேருந்து ஓட்டுனர் பேருந்தை மருத்துவமனைக்கு ஓட்டி சென்றார்.பேருந்திலிருந்து கர்ப்பிணிப்பெண்ணை மருத்துகவமனைக்கு கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மருத்துவர்கள் பேருந்திலேயே பிரசவம் பார்த்தனர்.பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். தாயும் குழந்தையும் நலமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். ஓட்டுனருக்கும் மருத்துவர்களுக்கும் பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here