ஓடும் பேருந்தில் பாலியல் சீண்டல்! சில்மிஷ பயணிக்கு கடும் எதிர்ப்பு!!

புவனேஸ்வர்: ஓடும் பஸ்சில் பாலியல் சீண்டலுக்கு ஆளான பெண் சீறும் விடியோ வைரலாகி வருகிறது.
பெண்ணுக்கு எதிரான வன்முறைகள் குறித்த சட்டங்கள் கடுமையாக்கப்பட்டு வருகின்றன.ஆனால்,வக்கிரகுணம் படைத்தவர்கள் தாங்களாக சரியாகும்வரை பெண்கள் நிம்மதியாக இருக்கமுடியாது என்பதுபோல் தினந்தோறும் நாட்டின் பல இடங்களில் பாலியல் புகார்கள் எழுந்துவருகின்றன.
ஒடிசா தலைநகர் புவனேஸ்வரில் மாநகர பேருந்தில் சென்றுகொண்டிருந்தார் வேலைக்கு சென்றுகொண்டிருந்தார் ஒருபெண்.அவர் கடைசி இருக்கைக்கு முந்தைய இருக்கையில் இருந்தார்.
கடைசி இருக்கையில் அமர்ந்திருந்த ஒருவர் அப்பெண்ணின் காலை தடவி பாலியல் சீண்டல் செய்துள்ளார்.

இதனால் வெகுண்டெழுந்தார் அப்பெண், அவருக்கு உதவியாக சில பயணிகளும் அந்நபரை கடுமையாக கண்டித்தனர். பேருந்தில் இருந்து நடுவழியில் அந்நபர் இறக்கிவிடப்பட்டார்.
இதனை சக பயணி ஒருவர் செல்போனில் விடியோ எடுத்து வெளியிட்டுள்ளார். இதுவைரலாக பரவி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here