கடல்நீர் சுத்திகரிப்பு திட்டத்தால் பயனில்லை! இஸ்ரேல் நிபுணர்கள் தகவல்!!

இஸ்ரேல்:கடல்நீரை சுத்திகரித்து விவசாயத்துக்கு பயன்படுத்துவது, குடிப்பது போன்றவற்றால் பயனில்லை என்று சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
கடல்நீரை குடிநீராக சுத்திகரிப்பதில் இஸ்ரேல் முன்னணி வகிக்கிறது.
எதிர்மறை சவ்வூடுபரவல் என்ற தொழில்நுட்பத்தில் கடல்நீர் சுத்திகரிக்கப்படுகிறது.
ஆண்டுதோறும் இஸ்ரேலில் 100மில்லியன் கனமீட்டர் கடல்நீர் சுத்திகரிக்கப்படுகிறது.
இந்நீர் குடிநீர் தரம் உடையது. எனவே குடிப்பதற்கும், விவசாய பணிகளுக்கும் பயன்படுத்தப்படுகிறது.
இந்நீரை தொடர்ந்து குடித்துவந்தால் ஐயோடின் பற்றாக்குறை ஏற்படும். இதனால் மன அழுத்தம், தூக்கம் வராதிருத்தல் போன்றவற்றால் பாதிக்க நேரிடுவதாக தெரியவந்துள்ளது.

இந்நீரில் போதிய அளவு மெக்னீசியம், கால்சியம் சத்துக்கள் இருப்பதில்லை. எனவே, இந்நீரை பயன்படுத்தி விவசாயம் செய்தால் பயிர் முழுமையாக வளர்ச்சி அடைவதில்லை. தக்காளி போன்ற தோட்டப்பயிர்களில் மகசூல் குறைந்த அளவே கிடைக்கிறது என்று ஜிலாட் விவசாய மையத்தின் சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here