விராட்கோலிக்கு ரூ.12 லட்சம் அபராதம்!

பெங்களூரு: ராயல் சேலஞ்சர்ஸ் அணி கேப்டன் விராட்கோலிக்கு சர்வதேச கிரிக்கெட் வாரியம் ரூ.12லட்சம் அபராதம் விதித்துள்ளது.ஐபிஎல் போட்டியில் 24-வது லீக் ஆட்டம் புதன்கிழமை பெங்களூரில் நடந்தது. முதலில் பேட் செய்த பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி 8 விக்கெட் இழப்புக்கு 205 ரன்கள் சேர்த்தது. இப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.இந்தப் போட்டியில் பெங்களூரு அணி வீரர்கள் பந்து வீசுவதற்கு அதிகமான நேரம் எடுத்துக்கொண்டனர் என்று கள நிடுவர்கள் போட்டி நடுவரிடம் புகார் அளித்தனர்.
இது குறித்து விசாரணை நடத்திய ஐபிஎல் நிர்வாகம், மற்றும் போட்டி நடுவர் குழு, ஐபிஎல் விதிமுறைகளை மீறி பந்து வீசுவதற்கு அதிகமான நேரம் எடுத்துக்கொண்டதை உறுதிசெய்தது.பெங்களூரு அணியின் கேப்டன் விராட் கோலிக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதிப்பதாக அறிவித்தது.
பெங்களூரு அணி பந்து வீச அதிகநேரம் எடுத்துக்கொள்ளும் குற்றச்சாட்டில் முதல் முறையாக சிக்குவதால், இந்த அளவு குறைவான அபராதம் விதிக்கப்பட்டதாகவும் ஐசிசி நிர்வாகம் அறிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here