Connect with us

International

ஹெலிகாப்டர் இறக்கையில் சிக்கினார்! மீட்புப்பணி வீரர் பரிதாப பலி!!

Published

on

கொலம்பியா: மீட்பு பணியில் ஈடுபட்ட ஹெலிகாப்டரின் இறக்கையில் அடிபட்டு பரிதாபமாக ஒருவர் இறந்தார்.
கொலம்பியாவில் உள்ள காவ்கா பகுதியில் அதிர்ச்சி தரும் இச்சம்பவம் நடந்துள்ளது.காவ்கா வழியாக மருத்துவ எந்திரங்களை எடுத்துச்சென்ற ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது.
கருவிகளை மீட்டு எடுக்கும் பணியில் மற்றொரு ஹெலிகாப்டர் ஈடுபட்டது.
ஹெலிகாப்டரில் சிக்கிய கருவிகளை மீட்க 4முறை முயன்றபோதும் முடியவில்லை.ஐந்தாவது முறையாக மீட்பு ஹெலிகாப்டர் சற்று சரிந்த நிலையில் பறந்தது.
அதில் கருவி மீது பொருத்திய செயினை ஒரு வீரர் கோர்க்க நினைத்தார்.எதிர்பாராத விதமாக ஹெலிகாப்டரின் இறக்கை அவர் உடலை கூறுபோட்டது.
சம்பவ இடத்திலேயே அவர் இறந்தார். கருவிகளை அங்கேயே விட்டுவிட்டு அவர் உடலுடன் ஹெலிகாப்டர் பறந்துசென்றது.

Copyright © 2017 Zox News Theme. Theme by MVP Themes, powered by WordPress. Shared By Fancy Text Generator