பேஸ்புக் வருவாய் 63% அதிகரிப்பு!

சான்பிரான்சிஸ்கோ: பேஸ்புக் நிறுவனம் நடப்பு நிதியாண்டின் முதல் மூன்று மாதங்களில் 63%வருவாய் ஈட்டியுள்ளது.
அமெரிக்காவின் சமூகவலைத்தள நிறுவனம் பேஸ்புக். உலகம் முழுவதும் பிரபலமான ஒன்று.இந்நிறுவனத்தில் இணைந்துள்ளவர்களின் தகவல்கள் லீக் ஆனதாக பரபரப்பு ஏற்பட்டது.
அதனை நேர்மையாக ஒப்புக்கொண்ட பேஸ்புக் நிறுவனம் அதனை தடுப்பதற்கான நடவடிக்கைகள் எடுத்துள்ளது.
இந்நிறுவனம் தனது முதல் காலாண்டு நிதிநிலை அறிக்கையை வெளியிட்டுள்ளது.
அதில் முதல் காலாண்டில் 11.97பில்லியன் டாலர் வருவாய் ஈட்டியுள்ளது.மேலும் குறிப்பிட்ட காலாண்டில் பேஸ்புக் பயனாளர்கள் எண்ணிக்கை 149கோடியாகி உள்ளது. அதாவது 3.42சதவீதம் உயர்ந்துள்ளனர்.
பங்குச்சந்தை வல்லுநர்கள் பேஸ்புக் 11.40பில்லியன் வருவாய் ஈட்டும் என்று எதிர்பார்த்திருந்தனர்.

அதனையும் மீறி 11.97பில்லியனாக பேஸ்புக் வருவாய் உயர்ந்துள்ளது. அதன் ஒரு பங்கு சம்பாத்தியம் தற்போது 1.69டாலராக அதிகரித்துள்ளது.
இது பேஸ்புக் பங்குகளில் முதலீடு செய்தோரை மகிழ்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here