அதிமுகவின் துரோகி தினகரன்! திவாகரன் அதிரடி பேட்டி!!

சென்னை: அதிமுகவின் மிகப்பெரிய துரோகி தினகரன் என்றும், அவர் முதலமைச்சராக ஆசைப்பட்டதால்தான் கட்சியில் சிக்கலை ஏற்படுத்தியதென்றும் சசிகலாவின் சகோதரன் திவாகரன் தெரிவித்துள்ளார்.
பிரபல சானலுக்கு திவாகரன் அளித்துள்ள பேட்டி விபரம்:எடப்பாடி பழனிச்சாமியையும், ஓ.பன்னீர் செல்வத்தையும் ஒப்பிடும் போது தினகரனே இப்போது துரோகியாக தெரிகிறார். அவர்கள் இருவரும் எவ்வளவோ பரவாயில்லை என்றே எண்ணத்தோன்றுகிறது.டி.டி.வி.தினகரனை சசிகலா துணை பொதுச்செயலாளராக அறிவித்தபோதே நான் ஏற்றுக்கொள்ளவில்லை. நான் எடப்பாடி பழனிசாமியை தான் ஆதரித்தேன்.ஓ.பி.எஸ். மீது குற்றம் சுமத்தி அவரை வெளியில் அனுப்பினார்கள். அவர் தன்னை காப்பாற்றிக் கொள்ள சில விஷயங்களை செய்தார். அதேபோன்று எடப்பாடியிடமும் நடந்து கொண்டனர். ஆனால் அவரிடம் பாட்சா பலிக்கவில்லை.
இப்போது என்னிடமும் அதே போன்று நடந்து கொள்கிறார்கள். எங்கிட்டேயும் அவர்களின் பாட்சா பலிக்காது.தினகரன் முதல் அமைச்சராக ஆசைப்பட்டதால்அ.தி.மு.க.வுக்கு இவ்வளவு பிரச்சினையும் ஏற்பட்டுள்ளது.
இல்லாவிடில் சசிகலா சிறையில் இருந்தபடியே பொதுச் செயலாளராகவே இருந்திருப்பார்.பெங்களூர் சிறைக்கு சென்று அவரிடம் தினகரன் முதலமைச்சர் பதவியை கேட்டார். அவர் கொடுக்கவில்லை. அடுத்த கட்டமாக துணைப் பொதுச்செயலாளர் பதவியையாவது கொடுங்கள் என்று பிச்சை கேட்டார். அவரும் அந்த பதவியை வழங்கினார். அதை வைத்து இப்போது எல்லோரையும் ஆட்டி வைக்கிறார். இதனால் சசிகலாவுக்கு கெட்ட பெயர்தான் ஏற்பட்டுள்ளது.

123 எம்.எல்.ஏ.க்கள் 38 எம்.பி.க்கள், கொடி, இரட்டை இலை எல்லாவற்றுடன் தானே தினகரனிடம் கட்சியை கொடுத்துவிட்டு சென்றார் சசிகலா. இப்போது இதில் அவர் எதனை வைத்துள்ளார். கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆன மாதிரி ஆகிவிட்டது. அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்னு இப்போது பேசிக் கொண்டிருக்கிறார். தினகரன் போலி நாடகமாடிக் கொண்டிருக்கிறார். இவ்வாறு திவாகரன் பேட்டியளித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here