5வயது சிறுமி பலாத்காரம்! சிறுவர்கள் அதிரடி கைது!!

ஜெகத்சிங்பூர்:ஒடிசாவில் பாலியல் பலாத்கார சம்பவங்களால் அறியாத வயதுடைய சிறுகுழந்தைகள் பெருமளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.ஜெகத்சிங்பூர் நகரில் 5வயது சிறுமியை பலாத்காரம் செய்ததாக இருசிறுவர்கள் கைது செய்யப்பட்டனர்.
இதுகுறித்து காவல்துறை அதிகாரி மிஸ்ரா கூறுகையில், கடந்த புதன் கிழமை இரவு கடைக்கு சென்றுள்ள 5வயது சிறுமியை இரு சிறுவர்கள் அருகில் உள்ள பள்ளி வளாகத்துக்கு தூக்கி சென்றனர்.அங்கு அச்சிறுமியை பாழாக்கிவிட்டு தப்பிச்சென்றனர். நீண்டநேரம் கழித்து வீடு திரும்பிய சிறுமி தனக்கு நேர்ந்த சம்பவத்தை பெற்றோரிடம் விவரித்தார். குற்றவாளிகளையும் அடையாளம் கூறினார்.பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர். போலீசார் உடனடியாக இரு சிறுவர்களையும் கைது செய்தனர்.
அவர்களில் ஒருவர் 11வயது மற்றொருவர் 15வயதுடையவர். இருவரையும் மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். போக்சோ சட்டத்தின் கீழ் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here