யூடியூப் அதிரடி!! 50லட்சம் விடியோக்கள் நீக்கம்!!

வாஷிங்டன்:விதிமுறைகளை மீறிய 50லட்சம் விடியோக்களை நீக்கியுள்ளது யூடியூப்.
கூகுள் நிறுவனத்தின் விடியோ ப்ளாட்பாரமாக யூடியூப் இயங்கி வருகிறது.இந்நிறுவனம் விடியோக்களை அப்லோடு செய்வதற்கு உதவியாக பயிற்சி விடியோக்கள் வெளியிட்டுள்ளது.
விடியோக்களில் சேர்க்கும் கிராபிக்ஸ், இசை, எடிட்டிங் போன்றவற்றுக்கான சாப்ட்வேர்களை இலவசமாக தருகிறது.இதனால் தினந்தோறும் லட்சக்கணக்கான விடியோக்கள் உலகம் முழுவதும் யூடியூப்பில் பதிவேற்றப்படுகின்றன.
அவற்றின் தரத்தை பரிசோதிப்பது கடினமான பணி என்பதால் அதற்காக அல்காரிதம் எனப்படும் தானியங்கி கணக்கீட்டு முறையை யூடியூப் அறிமுகப்படுத்தியுள்ளது.இம்முறையில், சுமார் 50லட்சம் விடியோக்கள் நீக்கப்பட்டுள்ளன. சுமார் 15லட்சம் விடியோக்கள் பரிசீலனையில் உள்ளன.
சமூக பிரச்சனையை உருவாக்குபவை, சீர்கேட்டை ஏற்படுத்துபவை, தீவிரவாத அமைப்புகள் தொடர்பான விடியோக்கள் அகற்றப்பட்ட விடியோக்களில் அதிகளவு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.சர்ச்சைக்குரிய வகையிலோ அல்லது எதிர்ப்பு தரும்வகையிலோ, காப்புரிமை உள்ளிட்ட சட்டவிதிகளை மீறியோ பதிவேற்றப்படும் விடியோக்களை பதிந்தவர்கள் 3மாதம் தடைவிதிக்கப்படுகின்றனர்.
தற்போது சுடச்சுட செய்திகள் என்றபெயரில் பதிவிடப்படும் விடியோக்கள் அதிகளவில் தவறான செய்திகள், காட்சிகளை உடையதாக உள்ளன. இவற்றை கட்டுப்படுத்த யூடியூப் ஆலோசித்து வருகிறது.யூடியூப் விடியோக்களுக்கு உலகளவில் தேவை அதிகரித்துள்ளது. எனவே, கூகுள் நிறுவனத்தின் வருவாயில் குறிப்பிட்ட அளவு யூடியூப் தந்துவருவது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here