அமீரக விளையாட்டு அணியில் எந்நாட்டு வீரரும் சேரலாம்!!

அமீரகம்: விளையாட்டு அணிகளில் அமீரகத்தில் வசிக்கும் வெளிநாட்டினரும் பங்கேற்கலாம் என்று புதிய சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.இளைஞர்கள் மத்தியில் கலாச்சாரம், பண்பாடு, பொறுமை இவற்றை வளர்க்கும் விதமாக பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இதுவரை தேசிய, சர்வதேச போட்டிகளில் பங்கேற்க உள்நாட்டு வீரர்கள் மட்டுமே தேர்வு செய்யப்பட்டு வந்தனர்.தற்போது அமீரகத்தை சேர்ந்த பெண்ணின் குழந்தைகள், அமீரக பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள், அமீரகத்தில் பிறந்த வெளிநாட்டினர் என்று அனைத்து தரப்பினரும் விளையாட்டு அணிகளில் பங்கேற்கலாம்.

இவ்வாறு அமீரகத்தின் விளையாட்டுத்துறை சட்டத்தில் புதிய விதிமுறை ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இப்புதிய சட்டத்துக்கு அமீரகத்தின் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இது வரலாற்றுச்சிறப்புமிக்க முடிவு என்று விளையாட்டு ஆர்வலர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here