கத்தாரில் ஆட்சி கவிழ்ப்பு! சவுதி அமைச்சர் கொக்கரிப்பு!!

சவுதிஅரேபியா: கத்தார் அரசை கவிழ்ப்போம் என்று பகிரங்கமாக மிரட்டியுள்ளது சவுதி அரேபியா.
தீவிரவாத அமைப்புகளுக்கு உதவுவதாக கத்தார் நாட்டின் மீது குற்றம்சாட்டி வளைகுடா கூட்டமைப்பில் இருந்து விலக்கிவைக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் கத்தார் அரசு மீது தொடர்ந்து சவுதிஅரேபியா, அமீரகத்தை சேர்ந்த அமைச்சர்கள் விமர்சனங்களை தெரிவித்து வருகின்றனர்.
இதற்கிடையே, சிரியாவில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறிய பின்னர் அங்கு அரபுநாடுகளின் கூட்டுப்படைகள் பாதுகாப்பு பணியில் ஈடுபடவேண்டும் என்று அமெரிக்க அதிபர் கேட்டுக்கொண்டுள்ளார்.சவுதி, அமீரகம், குவைத் இதற்கு சம்மதம் தெரிவித்துள்ளன. எகிப்து கூட்டுப்படையில் பங்கேற்க போவதில்லை என தெரிவித்துவிட்டது. கத்தார் வெளிப்படையான கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை.
இந்நிலையில், சவுதி வெளியுறவுத்துறை அமைச்சர் அதல் அல் ஜூபைர் விடுத்துள்ள அறிக்கையில்,

அமெரிக்காவின் வேண்டுகோளை கத்தார் ஏற்கவேண்டும். கத்தார் சிரியாவுக்கு படைகள் அனுப்பவேண்டும்.
இல்லாவிடில் அந்நாட்டின் ஆட்சி கலைக்கப்படும் என்று எச்சரித்துள்ளார்.
அமெரிக்க அரசு மட்டுமே கத்தாருக்கு பாதுகாப்பு தந்துவருகிறது. அதுமட்டும் இல்லாவிட்டால், ஒரேவாரத்தில் கத்தாரில் ஆட்சியை கலைத்துவிடுவோம் என்று அறிக்கையில் கொக்கரித்துள்ளார். இச்செய்தியை நியூ அராப் இணையம் வெளியிட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here