துப்பாக்கி முனையில் சிறுமியை திருமணம் செய்த தாதா!

பிகார்: பிகாரில் துப்பாக்கி முனையில் சிறுமியை திருமணம் செய்துகொண்ட தாதாவின் புகைப்படம் இணையத்தில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.பிகார் சன்கொலா பகுதியை சேர்ந்த பிரபல தாதா பப்பு. இவர் மீது பல வழக்குகள் உள்ளன.  கைதாகி சிறையில் இருந்த இவர் சமீபத்தில் ஜாமீனில் வெளிவந்தார். அவர் ஜோதிடர் ஒருவரை சந்தித்தார். அவர் ஆலோசனைப்படி  திருமணம் செய்துகொள்ள திட்டமிட்டார்.சன்கொலா பகுதியை சேர்ந்த 8வயது சிறுமி கடந்த சில தினங்களாக காணவில்லை. இதுகுறித்து பெற்றோர் போலீசில் புகார் செய்திருந்தனர்.   இந்நிலையில் அச்சிறுமியை பப்பு துப்பாக்கி முனையில் திருமணம் செய்துகொண்டுள்ள புகைப்படம் வெளியாகி உள்ளது.இதுகுறித்து 4தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.  பப்பு பிடிபட்டால் அவர் மீது போக்சா சட்டத்தின் கீழ் ஜாமீனில் வெளிவரமுடியாத வகையில் வழக்கு பதிவு செய்யப்படும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here