Connect with us

Crime

பிரதமர் மோடியை கொல்ல சதி? போலீசார் தீவீர விசாரணை!

Published

on

கோவை: கோவை குனியமுத்தூர் காவல்நிலைய ஆய்வாளர் தாமோதரனின் செல்போனுக்கு வாட்ஸ்அப் செய்தி வந்தது.அதில் மோடியையே நாங்க கொல்லணுமுன்னு முடிவு பண்ணி வைச்சிருக்கோம்.
அப்படின்னா நாங்க எப்படிப்பட்ட ஆளாக இருப்போமுன்னு பாத்துக்கங்க. அத்வானிக்கு கோயம்புத்தூருல குண்டு வெச்சோம். நான் பாக்காத கேஸே இல்ல என்று பேசியுள்ளார்.இது குறித்து உதவி ஆய்வாளர் தாமோதரன் மாநகர காவல் ஆணையரிடம் தகவல் தெரிவித்தார்.விசாரணையில் கோவை கரும்புக்கடை ஆப்பிள்கார்டனை சேர்ந்த முகமது ரபீக் என்பது தெரிந்தது. அவர் சேலத்தை சேர்ந்த வாகனங்களுக்கு நிதி உதவி செய்யும் பிரகாஷ் என்பவரிடம் இவ்வாறு பேசியது தெரிய வந்தது.போலீசார் முகமது ரபீக்கை கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.1998 ம் ஆண்டு கோவையில் நடைபெற்ற வெடிகுண்டு வழக்கில் தண்டனை பெற்ற முகமது ரபீக் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. இது குறித்து அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருவதாக போலீசார் கூறியுள்ளனர்.

 

 

Copyright © 2017 Zox News Theme. Theme by MVP Themes, powered by WordPress. Shared By Fancy Text Generator