மஞ்சள் படைக்கு மேலும் ஒரு வெற்றி!

பெங்களூர்: ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் மஞ்சள் படை மீண்டும் வெற்றிபெற்றது.
பெங்களூரு அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் சென்னை அணி இன்று பங்கேற்றது.
பெங்களூர் சின்னசாமி ஸ்டேடியத்தில் போட்டி நடைபெற்றது.டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் பந்து வீச்சை தேர்வு செய்தார்.
பெங்களூரு அணி கொடுக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 205 ரன்கள் குவித்தது.
அந்த அணியில் அதிகபட்சமான டிவில்லியர்ஸ் 68 , டி.காக் 53, ரன்கள் எடுத்தனர்.
தொடர்ந்து விளையாடிய சென்னை அணி 19.4ஓவர்களில் 5விக்கெட் இழந்து 207ரன் எடுத்தது.5விக்கெட் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது.
சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரர் வாட்ஸன் முதல் ஓவரிலேயே அவுட்டானார்.
6,7,9,18ஓவர்களில் விக்கெட்டுகள் வீழ்ந்தன.
தோனி 64ரன், பிரேவோ 3ரன்களுடன் வெற்றி இலக்கை அடைந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here