வாடகை டாக்சியில் துபாய் இளவரசர்!

நியூயார்க்: துபாய் நாட்டின் பட்டத்து இளவரசர் வாடகை டாக்சியில் பயணம் செய்த விடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.துபாய் இளவரசர் ஷேக் ஹம்தன்(35) வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்வதில் எப்போதும் விருப்பம் கொண்டவர்.
35வயதான இளவரசர் சிறந்த கவிஞரும் கூட. சமீபத்தில் நியூயார்க் சென்றிருந்தார்.
தான் தங்கியிருந்த ஓட்டலில் இருந்து அப்பகுதியில் உள்ள மியூசியத்துக்கு செல்ல வாடகை டாக்சியில் சென்றார்.பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த இந்தியர் டாக்சியை ஓட்டினார்.
இறங்குமிடம் வந்ததும் டிரைவரிடம் விடைபெற்று செல்கிறார் இளவரசர்.
அவர் இளவரசர் என்பது தெரியாத டிரைவரும், நன்றி. இந்த நாள் உங்களுக்கு சிறப்பாக அமையட்டும் என்று வாழ்த்துகிறார். இதனை விடியோ எடுத்து வெளியிட்டுள்ளார் இளவரசர்.

2016ல் தந்தையுடன் லண்டன் டியூப்ரயிலில் மக்களோடு மக்களாக இளவரசர் பயணித்தார். அப்படங்கள் அப்போது ஊடகங்களில் வெளியாகி பலத்த வரவேற்பு பெற்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here