டிரைவருடன் செல்வோர் செல்போன் பேச தடை!

லண்டன்:ஓடும் வாகனத்தில் டிரைவர் அருகில் செல்போன் பேசிக்கொண்டு செல்ல லண்டனில் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
ஐரோப்பாவில் செல்போன் பேசிக்கொண்டு வாகனத்தை இயக்குவது குற்றம் என்று 2003ல் அறிவிக்கப்பட்டது.யாரும் கேட்கவில்லை என்பதால் விபத்துகள் பெருகின. இதனால் சட்டம் கடுமையாக்கப்பட்டது.
செல்போன் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டும் டிரைவருக்கு 200பவுண்ட் அபராதம்.6 கருப்புப்புள்ளிகள் வழங்கப்படும்.2ஆண்டுகளுக்குள் 12 கருப்புப்புள்ளிகள் பெற்றால் லைசன்ஸ் ரத்தாகும். ஆனாலும், கடந்தஆண்டு 30ஆயிரம் லைசன்ஸ்கள் ரத்து செய்யவேண்டிய நிலை ஏற்பட்டது.
தற்போது போக்குவரத்து சட்டம் மேலும் கடுமையாக்கப்பட்டுள்ளது.அதன்படி, லைசன்ஸ் எடுத்த 2ஆண்டுகளில் 6கருப்புப்புள்ளி பெற்றால் லைசன்ஸ் ரத்தாகிவிடும்.
டிரைவர் மட்டுமின்றி டிரைவிங் பயிற்சி தருபவர், டிரைவருடன் அமர்ந்து செல்வோர் செல்போன் உபயோகித்தாலும் குற்றமாக கருதப்பட்டு அபராதம், கருப்புப்புள்ளிகள் விதிக்கப்படும். இவ்வாறு சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here