மம்தா தலைமைக்கு திமுக ஆதரவு!

சென்னை: 2019 பாராளுமன்றத் தேர்தலில் பாஜகவிற்கும், காங்கிரஸ் கட்சிகளுக்கு மாறாக மூன்றாவது கட்சியை ஏற்படுத்தும் முனைப்பில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் மேற்கு வங்காள முதல்-மந்திரியுமான மம்தா பானர்ஜி தீவிரமாக களத்தில் இறக்கி உள்ளார்.இதற்காக எதிர்க்கட்சி தலைவர்களை சந்தித்து ஆதரவு திரட்டிவருகிறார். அந்த வரிசையில் தேசியவாத காங்கிரஸ் சிவசேனா மற்றும் ராஷ்டீரிய ஜனதா தளம் கட்சியின் தலைவர்களை மம்தா பானர்ஜி சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.இந்த கூட்டணியில் சேர தமிழக கட்சியான திமுகவுக்கும் கடந்த மார்ச் மாதம் மம்தா அழைப்பு விடுத்திருந்தார். சென்னைக்கு நேரில் வந்து திமுக செயல் தலைவர் ஸ்டாலினை சந்திக்கவும் மம்தா திட்டமிட்டிருந்தார். மம்தாவின் சென்னை பயணம் ரத்தானது.இந்நிலையில் தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் திமுக எப்போதும் பிராந்திய கட்சிகளின் ஒற்றுமைக்காகவும் வலிமையான கூட்டாட்சிக்காகவும் துணை நிற்கும். பாஜககட்சியின் சர்வாதிகார மற்றும் ஜனநாயக விரோத ஆட்சிக்கு எதிராகப் பல்வேறு அரசியல் கட்சிகளை இணைக்கும் மம்தா பானர்ஜியின் முயற்சியை நான் ஆதரிக்கிறேன் என பதிவிட்டிருந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here