போராட்டக் களத்தில் சுருண்டுவிழுந்த ஆசிரியர்கள்!

சென்னை: ஊதிய முரண்பாடுகளை நீக்கி சம வேலைக்கு சம ஊதியம் வழங்க கோரி இடைநிலை ஆசிரியர்கள் சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
2009ம் ஆண்டு ஜூன் மாதத்திற்கு பின்னர் பணியில் சேர்ந்தவர்களுக்கு 20 ஆயிரம் ரூபாய் வரை குறைவான ஊதியமே வழங்கப்படுகிறது என இடைநிலை ஆசிரியர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.ஒரே கல்வி தகுதியுடன் ஒரே பணியை செய்து வரும் நிலையில் ஊதிய முரண்பாட்டை களைய வலியுறுத்தி
சென்னை நுங்கம்பாக்கம் டி.பி.ஐ வளாகத்தில் கடந்த திங்கள்கிழமை முதல் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் தொடங்கினர். அவர்களை, போலீஸார் கைது செய்து எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டரங்கில் காவலில் வைத்தனர்.அன்றைய தினம் மாலையில் விளையாட்டு அரங்கத்திலிருந்து வெளியேற மறுத்த ஆசிரியர்கள், விடிய விடிய போராட்டத்தைத் தொடர்ந்தனர்.அவர்களுடன் போலீஸாரும், கல்வித்துறை அதிகாரிகளும் நடத்திய பேச்சுவார்த்தையில் எந்தவிதமான முன்னேற்றமும் ஏற்படவில்லை. மேலும், போலீஸார் கொடுத்த உணவையும் ஆசிரியர்கள் சாப்பிடவில்லை.இந்நிலையில் செவ்வாய்க்கிழமை காலை உடல்சோர்வு காரணமாக போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களில் சிலருக்கு மயக்கம் ஏற்பட்டது. 27 ஆசிரியர்கள் அருகில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். திமுக செயல்தலைவர் ஸ்டாலின் போராட்டக்களத்துக்கு வந்து ஆசிரியர்களுக்கு ஆதரவு தெரிவித்தார்.இதற்கிடையே, ஊதிய முரண்பாட்டை களைய ஒருநபர் கமிஷன் அமைக்கப்பட்டுள்ளது. ஆசிரியர் போராட்டத்தை கைவிடவேண்டும் என்று அரசு தரப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

படங்கள் நன்றி: ஆசிரியர்.காம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here