போதையில் மனைவியை கொலை செய்த கணவர்!

சென்னை: அப்துல் ஜாபர் சென்னை வியாசாபாடி சிவகாமி அம்மை தெருவில் வசிப்பவர். இவரது மனைவி முபாரக் பேகம். அப்துல் ஜாபர் மது அருந்தும் பழக்கம் உடையவர்.ஜாபர் குடித்து விட்டு மனைவியிடம் அடிக்கடி சண்டை போட்டு வந்துள்ளார். குடும்பத்தில் நிம்மதி இல்லாமல் இருந்தது.நேற்றும் வழக்கம்போல் குடித்து விட்டு மனைவியிடம் தகராறு செய்து வாக்குவாதம் செய்துள்ளார்.அக்கம் பக்கம் உள்ளவர்கள் சமாதானம் செய்து வைத்தனர். பின்னர் முபாரக் பேகம் தூங்கி விட்டார்.மது போதையில் இருந்த முபாரக் ஆத்திரத்துடன் திரிந்தார். அங்கிருந்த அம்மிக்கல்லை எடுத்துதூங்கி கொண்டிருந்த மனைவி மீது வீசினார். பலத்த காயமடைந்த முபாரக் பேகம் ரத்த வெள்ளத்தில்உயிரிழந்தார்.சத்தம் கேட்டு வந்தவர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் உடலை கைப்பற்றினர். மனைவியை கொலை செய்து தப்பியோடிய அப்துல் ஜாபரை போலீசார் கைது செய்தனர்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here