Connect with us

india

நிலம் கையகப்படுத்த எதிர்ப்பு! தற்கொலை செய்ய அனுமதி கேட்கும் விவசாயிகள்!!

Published

on

அகமதாபாத்: குஜராத் மாநிலம் பாவ்நகரில் அனல்மின் நிலையம் அமைக்க விவசாய நிலங்களைகையகப்படுத்தி வருகின்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தற்கொலைக்கு அனுமதிக்கக்கோரி 5 ஆயிரத்துக்கும் அதிகமான விவசாயிகள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.விளைநிலங்களை கட்டாயமாக கையகப்படுத்துவதால் வாழ்வாதரத்தை இழக்க நேரிடும். இதை விட்டால் எங்களுக்கு வாழ வேறு வழியில்லை.குஜராத் அரசு மின் உற்பத்தி நிறுவனத்துடன் சேர்ந்து காவல்துறையை ஏவி தாக்குதல் நடத்தி வருவதாகவிவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.அனல்மின் நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் கடந்த டிசம்பர் முதலே தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

Copyright © 2017 Zox News Theme. Theme by MVP Themes, powered by WordPress. Shared By Fancy Text Generator