விவசாயம் படிக்கலாம்! ஐ.ஏ.எஸ். ஆகலாம்!!

திருவண்ணாமலை:தேசத்தந்தையின் சுயசார்பு என்ற கனவை நனவாக்கும் வகையில் திருவண்ணாமலை அருகே செய்யாறில் சபர்மதி குருகுலம் நிறுவப்பட்டு இயங்கி வருகிறது.செய்யாறு பஸ்டிப்போவுக்கு எதிரேயுள்ள பெரியவேளியநல்லூரில் இயங்கிவருகிறது சபர்மதி. இங்கு போட்டித்தேர்வுகளுக்காக மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுவருகிறது.

இங்கு தங்கிப்படிக்க மாதக்கட்டணம் ரூ.2ஆயிரம் மட்டுமே. இத்தொகையை செலுத்தமுடியாதவர்களும் பயிற்சிக்கு சேர்த்துக்கொள்ளப்படுகிறார்கள்.
போட்டித்தேர்வு பயிற்சியுடன் மாணவ மாணவிகளுக்கு விவசாயம், கால்நடை வளர்ப்பு, மரச்செக்கில் இருந்து எண்ணெய் எடுத்தல் ஆகிய பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.  இதனால் தனது சொந்தக்காலில் நிற்கலாம் என்ற நம்பிக்கை அவர்கள் மனதில் ஊன்றப்படுகிறது. இம்மையத்தை நடத்திவரும் சகோதரர்கள் குணசேகரன், ராஜவேந்தன் ஆகியோர் கூறுகையில், போட்டித்தேர்வு எழுதும் மாணவ மாணவிகள் நகரங்களையே நாடுகின்றனர். ஐந்தாறு ஆண்டுகள் வரையில் அங்கே தங்கி ஜெயித்தால் அரசு வேலை…இல்லாவிடில் மாற்றுவேலை என்று நகர்ந்து விடுகின்றனர்.

இதற்காக மாதந்தோறும் பத்தாயிரம் ரூபாய் வரை அவர்கள் செலவிட வேண்டியுள்ளது. ஆனால், இயற்கையான சூழலில் அவர்களுக்கு படிப்பதற்கான இடம் கிடைப்பது கடினம்.
இங்கு அமைதியான சூழலில் இயற்கை வாழ்வியலையும், கல்வியையும் சேர்ந்து படிக்கும் வாய்ப்புள்ளது. இலவச பயிற்சி, 3ஆயிரம் புத்தகங்களை பயன்படுத்துகின்றனர்.
இந்த ஆண்டு நீட் தேர்வு, யூபிஎஸ்சி, எஸ்.எஸ்.சி, வங்கி, ரயில்வே போட்டித்தேர்வுகளுக்கான பயிற்சிகளும் இலவசமாக அளிக்கப்படுகிறது. இங்குபயிற்சிபெற்ற துர்கா என்பவர் வங்கி மேலாளராகி உள்ளார் என்று பெருமையாக தெரிவிக்கிறார்.

கல்வி என்பது எழுத்தை அறிந்துகொள்வதோ கற்றுக்கொள்வதோ அல்ல. அசலான வாழ்வை எதிர்கொள்ளும் கல்வியே மனிதர்களை உருவாக்குகிறது என்று காந்தியடிகள் கூறியுள்ளார். அதனை நிறைவேற்ற தெற்கில் தோன்றியுள்ள சபர்மதி பாடுபடுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here