மாணவி பலாத்கார முயற்சி! இளைஞர் கைது!

ஆத்தூர்: தலைவாசல் புளியங்குறிச்சி கிராமத்தை சேர்ந்த 10ம் வகுப்பு மாணவி நேற்று இரவு வீட்டின் முன்பகுதியில் தூங்கி கொண்டிருந்தார். அதே பகுதியைச் சேர்ந்த மஞ்சப்பனின் மகன் ராஜ்குமார் குடிபோதையில் அங்கு வந்தார்.கட்டிலில் தூங்கி கொண்டிருந்த மாணவியின் வாயில் துணியை வைத்து பொத்தி பலாத்காரம் செய்ய முயற்சித்துள்ளார்.
மாணவியின் அலறல் சத்தம் கேட்டு அப்பகுதியில் திரண்ட பொது மக்கள் இளைஞரை பிடிக்க முயற்சித்தனர். இளைஞர் அருகிலுள்ள வேப்ப மரத்தில் ஏறிக் கொண்டார். பொதுமக்கள் மரத்தில் ஏறிய இளைஞரை கீழே இறக்கி மின்கம்பத்தில் கட்டி வைத்து சரமாரியாக தாக்கினர்.
தகவல் அறிந்து வந்த போலீசார் விசாரணை நடத்தினர். ராஜ்குமாரை இளம் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here