சித்தராமையா தொகுதியில் எடியூரப்பா மகனுக்கு சீட் இல்லை! பாஜக அதிரடி முடிவு!!

பெங்களூர்: கர்நாடக சட்ட சபைக்கு வரும் 12ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் இன்றுடன் முடிகிறது. காங்கிரஸ் முதல்வர் சித்தராமையா தனது சொந்த தொகுதி வருணாவில் மகன் யாதேந்திராவை
களம் இறக்குகிறார்.அதே தொகுதியில் பாஜக சார்பில் மகன் விஜயேந்திராவை நிறுத்த எடியூரப்பா முடிவு செய்திருந்தார். மனு தாக்கல் செய்வதற்கு முன்பே விஜயேந்திரர் தீவிரமாக தேர்தல் பணியில்ஈடுபட்டு வந்தார்.இந்நிலையில் வருணா தொகுதியில் அதிக வெற்றி வாய்ப்பு யாருக்கு என பாஜக மேலிடம் ஆய்வு நடத்தியது. ஆய்வில் எடியூரப்பாவின் மகன் விஜயேந்திரர் போட்டியிட்டால் வெற்றி கிடைக்காது என தெரியவந்தது.இதையடுத்து பாஜக மேலிடம் விஜயேந்திராவுக்கு சீட் வழங்க முடியாது என எடியூரப்பாவுக்கு தெரிவித்தது. இந்த தகவலை மைசூரு மாவட்டம் நஞ்சன்கூடுவில் நடந்த பொதுகூட்டத்தில் எடியூரப்பா தெரிவித்தார். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த விஜயேந்திரர் ஆதரவாளர்கள் ரகளையில் ஈடுபட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here